LATEST NEWS
நிஜமான சிங்கப்பெண் இவங்கதான்..! காட்டுப்பாதையில் மரண பயத்தை காட்டிய 2 சிறுத்தைகள்… ஒற்றை ஆளாக அலறவிட்ட இளம்பெண்… திக் திக் வீடியோ…!!
காட்டுப் பாதையில் ஸ்கூட்டர் பழுதடைந்து நின்றபோது, எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று பாய்ந்து தாக்கிய நிலையிலும், சிறிதும் அச்சமின்றி தனது ஹெல்மெட்டைப் கேடயமாகப் பயன்படுத்தி ஒரு சிறுமி தன்னைத் தற்காத்துக் கொண்டுள்ளார். அந்த சிறுமியின் அசாதாரண துணிச்சலைக் கண்டு வியந்த நிலையில், அடுத்ததாக இரண்டாவது சிறுத்தையும் அவளைத் தாக்கியுள்ளது. ஆனால், தனது அசாத்திய தைரியத்தாலும், மன உறுதியினாலும் அந்த சிறுத்தை கூட்டத்திடமிருந்து போராடி, அவள் தனது உயிரை வெற்றிகரமாகக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் எவ்வளவு இன்றியமையாதது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஹெல்மெட் என்பது சாலை விபத்துகளில் இருந்து தலைக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், இது போன்ற விபரீதமான ஆபத்துக் காலங்களிலும் உயிர்காக்கும் ஒரு முக்கிய ஆயுதமாக மாறும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
