போலீஸுக்கே விபூதி அடித்த தருணம்…! போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மாயமான 32 துப்பாக்கிகள்… 4 மாநிலங்களை அலறவிட்ட 22 வயது இளைஞன்… சிக்கியது எப்படி? – cinefeeds
Connect with us

LATEST NEWS

போலீஸுக்கே விபூதி அடித்த தருணம்…! போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மாயமான 32 துப்பாக்கிகள்… 4 மாநிலங்களை அலறவிட்ட 22 வயது இளைஞன்… சிக்கியது எப்படி?

Published

on

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்திலேயே 32 துப்பாக்கிகளைத் திருடி, அதனை 4 மாநிலங்களில் விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஃபரிதாபாத் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவிகளுக்காக தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட 22 வயதான மோனு என்ற இளைஞரே இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டுப் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காவல் நிலையத்தின் பாதுகாப்பு ஓட்டைகளைப் பயன்படுத்தித் திட்டமிட்டு துப்பாக்கிகளைத் திருடிய மோனு, அவற்றை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டவிரோத கும்பல்களுக்கு விற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. இவ்வழக்கில் மோனுவைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவரிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கிய நபர்களையும் தீவிரமாகத் தேடி அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.

Copyright © 2023 www.cinefeeds.in