LATEST NEWS
அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து செக்… ஆளுநருக்கு முதல்வர் விஜய் அனுப்பிய ரகசிய கோப்பு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!!
தமிழக முதல்வர் தலைமையிலான மாநில அரசு, முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ‘விசாரணை அனுமதி’ கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மத்திய புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகள் தொடர்ந்துள்ள இந்த வழக்குகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள இக்கோப்புகளை விரைந்து பரிசீலித்து உரிய அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் மூலம் ஆளுநர் மாளிகைக்கு முறைப்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மீது, கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறை அவரை அதிரடியாகக் கைது செய்தது. இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கும் குற்றப்பத்திரிகையை இறுதி செய்வதற்கும் விசாரணை அனுமதி கோரும் அதிகாரப்பூர்வ கோரிக்கையை கடந்த மே மாதம் 15-ம் தேதி அமலாக்கத்துறை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது, அதன் அடிப்படையிலேயே தற்போது மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலை விரைந்து கோரியுள்ளது.
மற்றொருபுறம், முன்னாள் அமைச்சரான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2001-2006 காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை 2020-ல் விசாரணையைத் தொடங்கி அவரது குடும்பத்தினரின் பல கோடி மதிப்புள்ள 18-க்கும் மேற்பட்ட அசையா சொத்துகளை முடக்கியுள்ளது. புதிய பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 218-ன் கீழ், கடிதம் கிடைத்த 120 நாட்களுக்குள் மாநில அரசு முடிவெடுக்காவிட்டால் அந்த அனுமதி ‘வழங்கப்பட்டதாகவே கருதப்படும்’ என்ற கடுமையான சட்ட விதி உள்ளதாலும், அந்த 120 நாட்கள் கெடு நெருங்கி வருவதாலும், இக்கோப்பிற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
