LATEST NEWS
“என் மனைவி இறந்து 8 வருஷம் ஆச்சு… ஆனா”.. நெஞ்சை தொடும் ஆட்டோ டிரைவரின் காதல் கதை.. இணையத்தையே அழ வைத்த வீடியோ..!!
பெங்களூருவின் இந்திராநகர் போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த உள்ளடக்க உருவாக்குநர் ஆஷிஷ் மேத்யூ, வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தினமும் தனது ஆட்டோவுக்குள் இருக்கும் புகைப்படத்திற்குப் புதிய மலர்களை வைப்பதைக் கவனித்துள்ளார். அது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் புன்னகையுடன் “இவர் என் மனைவி” என்று கூறியுள்ளார். அவர் மறைந்து 8 ஆண்டுகள் ஆனபோதிலும், தினமும் முதல் பயணியை ஏற்றுவதற்கு முன்பாக மனைவியின் புகைப்படத்திற்குப் பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் என அன்பான குடும்பம் இருந்தபோதிலும், மனைவியின் பிரிவால் ஏற்பட்ட தனிமையை போக்கவும், தம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவுமே அவர் தினமும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
https://www.instagram.com/reel/DaLTCOuJaWn/?utm_source=ig_embed&ig_rid=AERE8wIarXR0bq1PQROZwxp
வீட்டில் முடங்கிக் கிடந்தால் நினைவுகள் வேதனையைத் தரும் என்பதால், தினமும் புதிய மனிதர்களைச் சந்தித்துத் தன் துக்கத்தைக் கடப்பதாக அந்தப் பெரியவர் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஆஷிஷ் மேத்யூ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இந்தக் காணொளி சுமார் 30 லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. போலித்தனமான காதலும், எளிதில் முறியும் உறவுகளும் நிறைந்த இன்றைய காலத்தில், வாழ்நாள் முழுமைக்குமான இந்த உண்மையான அன்பைக் கண்டு பலரும் நெகிழ்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
