தனியார் பள்ளி விடுதியில் +1 மாணவி மர்ம மரணம்…! கதறித் துடிக்கும் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனியார் பள்ளி விடுதியில் +1 மாணவி மர்ம மரணம்…! கதறித் துடிக்கும் பெற்றோர்..!!

Published

on

காஞ்சிபுரம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 16 வயது +1 மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த கார்த்திக் – மகாலட்சுமி தம்பதியரின் மகளான அம்மாணவி, பள்ளிக் வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கித் தனது மேல்நிலைப்படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மாணவி உயிரிழந்ததாக பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு தான் தனது மகளுடன் தொலைபேசியில் அன்பாகப் பேசியதாகவும், “அம்மா” என்று பாசத்தோடு அழைத்த மகள் இன்று காலையில் உயிரோடு இல்லை என்பதைப் பெற்றோரால் நம்பவே முடியவில்லை. “எனது மகளின் சாவில் ஏதோ பெரிய மர்மம் ஒளிந்திருக்கிறது” என மாணவியின் தாயார் கதறி அழுது கண்ணீர் சிந்திய காட்சிகள், அங்கிருந்த அனைவரையும் உரைய வைத்துப் பார்ப்போரின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in