LATEST NEWS
“என் அறைக்கே வந்து கதவை திறக்கச் சொன்னார்…!” பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை வழக்கு… வெளியாகிய பகீர் கடிதம்..!!
பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியான உதய கிருஷ்ணா ரெட்டி என்பவர் உயிரிழந்த நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயர் பதவியில் இருக்கும் ஒரு பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியின் இந்தத் தற்கொலை கடிதம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில், பெண் அதிகாரி ஒருவருடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்தும், அவருக்குத் திருமணம் முடிந்த பிறகும் அந்தத் தொடர்பு நீடித்தது குறித்தும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், “என் அறைக்கு வந்து கதவைத் திறக்க சொன்னார்” என்பது போன்ற பல பகீர் வாக்குமூலங்களையும் அவர் தனது தற்கொலைக்கு முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கிடையேயான இந்தத் தொடர்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் கைவசம் இருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து அந்தப் பெண் அதிகாரியின் கணவரிடமும் தான் விரிவாகத் தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
