CRIME
“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நம்ப வச்சு”… அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டும் பிரபல கிரிக்கெட் வீரர்.. கோர்ட் கதவை தட்டிய இளம்பெண்.. திடுக்கிடும் பின்னணி..!!
இந்தியக் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் மீது மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் மிகக் கடுமையான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்துத் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், தனியாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்து உணவு கூடத் தராமல் கொடுமைப்படுத்தியதாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும், தங்கள் அந்தரங்கத் தருணங்களின் புகைப்படங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதாகப் போரல் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, அப்பெண் கல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா, கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரலை உடனடியாகக் கைது செய்யவும், அதில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் வெளியாகாமல் தடுக்கும் வகையில் அவரது மின்னணு சாதனங்களைக் கைப்பற்றவும் வங்காள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் ஒரு பென் டிரைவைக் கைப்பற்றித் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், அபிஷேக் போரெல் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். 2023 முதல் தொடர்ந்த இந்த விவகாரத்தில், போரெல் மீது மொக்ரா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
