CRIME
இப்படியும் கூடவா ஸ்கேம் பண்ணுவாங்க?!.. “மலிவு விலையில் தங்கம் தர்றோம்!”.. நம்ப வச்சு ₹63 லட்சத்தை சுருட்டிய கில்லாடிகள்.. சிசிடிவியை வச்சு தூக்கிய போலிஸ்.. சென்னையில் பரபரப்பு..!!
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தங்க வியாபாரி அன்மோல் ஜெயின் என்பவரிடம், குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ₹63 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்மோலின் உறவினர் நமீத் கொடுத்த தகவலின் பேரில், எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் சக்தி மற்றும் அவரது தந்தை சாந்தகுமார் ஆகியோரை அன்மோலின் ஊழியர் ராஜேந்திர ஜெயின் சந்தித்துள்ளார். அங்குத் தங்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட ₹63 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட சக்தி, மேலே சென்று தங்கத்தையும் ரசீதையும் எடுத்து வருவதாகக் கூறிச் சென்று தலைமறைவானார்.
அதன்பின், சாந்தகுமார் நாடகமாடி அன்மோலை ஜெமினி பாலம் அருகிலுள்ள உணவகத்திற்கு வரவழைத்துக் காத்திருக்க வைத்து ஏமாற்றியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்மோல் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் சாந்தகுமார், ஸ்ரீராம், ராம்குமார் மற்றும் உதய்கிரண் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹50,000 ரொக்கம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய முக்கிய குற்றவாளியான சக்தியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
