LATEST NEWS
இவர்தான்யா நிஜ ஹீரோ!.. டெல்லியில் பசியோடு தவித்த இளைஞர்கள்… போன் மூலம் வந்த சர்ப்ரைஸ் உதவி.. இணையத்தை நெகிழ வைத்த சம்பவம்..!!
நீட் முறைகேட்டிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு எங்கிருந்தோ ஒரு கரம்பற்றி ஆறுதல் கிடைத்துள்ளது. கொட்டும் கனமழையில் பசியோடு களத்தில் நிற்கும் மாணவர்களுக்காக, மும்பையிலிருந்து ஒரு நபர் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டெலிவரி ஊழியர் பெரிய உணவுப் பைகளுடன் வந்து உணவுகளை வழங்கிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இதனையடுத்து அந்த உணவுகளை ஆர்டர் செய்து பணத்தையும் செலுத்திய மும்பை நபர், டெல்லியில் பசியோடு போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்த உணவை இலவசமாக வழங்கி விடுங்கள் என்று தன்னிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதாக டெலிவரி ஊழியர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அத்துடன், டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து பலரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
