LATEST NEWS
“வீட்டிற்குள் ‘இன்டோர் வாட்டர்ஃபால்’…!” டெல்லி உயர்மாடி வீட்டில் கொட்டிய வெள்ளம்… பில்டர்கள் மீது இணையத்தில் குவியும் கண்டனங்கள்..!!!
டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில், வீட்டின் கூரையிலிருந்து அருவி போல் நீர் கொட்டும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுமார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை மதிப்புள்ள இந்த சொகுசு வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த தீ தடுப்பு எச்சரிக்கை குழாய் உடைந்ததால், திடீரென வீட்டிற்குள் பெருமளவில் தண்ணீர் பாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
கூரையில் இருந்து இடைவிடாமல் கொட்டிய நீரால் வீட்டின் வரவேற்பறையில் இருந்த விலை உயர்ந்த சோபா, மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி கடுமையாக சேதமடைந்தன. சுவர்கள் மற்றும் தரைப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய வீட்டில், தரமற்ற கட்டுமானப் பொருட்கள் மற்றும் முறையற்ற குழாய் இணைப்புகளே இந்த பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/i/status/2079358889691414641
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பு முகமைகளின் அலட்சியப் போக்கையே இது காட்டுவதாகப் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக தொகை வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தரமான கட்டுமானத்தை உறுதி செய்ய உரிய பொறுப்புக்கூறல் அவசிய என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
