LATEST NEWS
“இது வெறும் எலும்பு இல்லை… மாபெரும் நீர் அரக்கன்!”.. 35 லட்சம் ஆண்டுகால மர்மம்.. ஜப்பானில் ஆராய்ச்சியாளர்களை மிரள வைத்த கண்டுபிடிப்பு..!!
ஜப்பானின் அஜிமு பகுதியில் உள்ள சுபுசுகாவா பண்டைய ஏரிப் படுகையில், கடந்த 1995 மற்றும் 1997-ஆம் ஆண்டுகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்ட மூன்று அரிய எலும்புகள் உயிரியல் வரலாற்றையே மாற்றியமைத்துள்ளன. ஆரம்பத்தில் இவை வழக்கமான பிரம்மாண்ட சாலமண்டர் வகையைச் சேர்ந்தவை என நினைக்கப்பட்ட நிலையில், கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவற்றை உன்னிப்பாக ஆராய்ந்தனர். இந்த ஆய்வில், அவற்றின் முதுகெலும்பு அமைப்பு இதுவரை அறியப்பட்ட எந்தவொரு ராட்சத சாலமண்டரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு இருப்பது தெரியவந்து, இது 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான முற்றிலும் புதிய இனம் என்பது உறுதியானது.
இந்த புதுவகை நீர்நில வாழ் உயிரினத்திற்கு விஞ்ஞானிகள் லிம்னோஸ்போண்டிலஸ் அஜிமுயென்சிஸ் எனப் பெயரிட்டுள்ளனர். அமைதியான ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழ்ந்த இந்த “நீர் அரக்கன்” சுமார் 3.6 அடி நீளம் வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த 20 மில்லியன் ஆண்டுகளாக ஆசியாவின் புதைபடிவப் பதிவேட்டில் இருந்த மிகப்பெரிய வரலாற்று இடைவெளியை நிரப்பியுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, தொல்லுயிரியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
