“அய்யோ அம்மா!”.. தையல் மிஷின் ஆயில் குடித்த கதறிய 1.5 வயதுக் குழந்தை..இறுதியில் முடிந்த சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ அம்மா!”.. தையல் மிஷின் ஆயில் குடித்த கதறிய 1.5 வயதுக் குழந்தை..இறுதியில் முடிந்த சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கௌதம் நகர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தையான ஹனியா கான், விளையாடிக் கொண்டிருந்தபோது தையல் இயந்திர எண்ணெயைக் குடித்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. லக்னோவில் பணிபுரியும் இம்ரான் கானின் மனைவி, தனது இரட்டைக் குழந்தைகளுடன் போபாலில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜூலை 16 அன்று தாய் தையல் மிஷினில் தைத்துக் கொண்டிருந்தபோது, அருகில் விளையாடிய குழந்தை ஹனியா எதிர்பாராதவிதமாக அத்தையல் மிஷின் எண்ணெயைக் குடித்துள்ளது. ஆரம்பத்தில் கவனிக்கப்படாத நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜூலை 19 அன்று பரிதாபமாக உயிரிழந்தது.

தையல் இயந்திர எண்ணெய் ஒரு ஹைட்ரோகார்பன் (Hydrocarbon) என்பதால், அதைக் குடித்த குழந்தையை வாந்தி எடுக்க வைப்பது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாந்தி எடுக்கும்போது அந்த எண்ணெய் சுவாசக் குழாய் வழியாக நுரையீரலைச் சென்று அடைந்து, கடுமையான நுரையீரல் அழற்சி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி உயிரளுக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in