LATEST NEWS
BREAKING: திமுகவிலிருந்து விலகினார் முக்கிய புள்ளி.. அதிர்ச்சியில் ஸ்டாலின்…!!
திமுக அயலக அணி இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான புகழ் காந்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது விலகல் கடிதத்தை அவர் கட்சியின் தலைமையகத்தில் நேரில் அளித்துள்ளார். திமுகவில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்த ஒரு முக்கியப் பொறுப்பாளர், திடீரென கட்சியை விட்டு விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அளித்துள்ள விலகல் கடிதத்தில், திமுக தற்பொழுது ஊழல் கூடாரமாகவும் ஒரு சில தனி நபர்களின் சர்வாதிகார அமைப்பாகவும் மாறிவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கட்சிக்காக உழைக்கும் திறமையான இளைஞர்களுக்குத் தகுந்த வாய்ப்புகளோ அல்லது உரிய இடமோ அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
