LATEST NEWS
ஒரு ராத்திரி தங்குனா ரூ.52,000 சம்பளம்… ‘பேய் வீடுகளை’ டெஸ்ட் பண்ண செம வேலை… ஜப்பானில் களமிறங்கிய புது பிசினஸ்..!!
ஜப்பானில் அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகள் நடந்த வீடுகளில் பேய் இருப்பதாகக் கருதி, பல ஆண்டுகளாக யாரும் வாங்காமல் பாழடைந்து கிடக்கின்றன. இத்தகைய வீடுகளை மீண்டும் சந்தையில் விற்பனை செய்வதற்காக, வீட்டின் உரிமையாளர்கள் ஒரு விசித்திரமான மற்றும் புதிய யோசனையைக் கையாண்டு வருகின்றனர். மக்கள் மனதில் உள்ள பயத்தைப் போக்கி, வீட்டை விற்பனைக்குத் தயார் செய்வதற்காகவே இந்த முயற்சியை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்காக, பேய் இருப்பதாக நம்பப்படும் அந்த வீடுகளில் பயமின்றி ஒரு இரவு முழுவதும் தங்கி ஆய்வு செய்ய ஆட்களை நியமிக்கின்றனர். அப்படித் தங்கி, அங்கு எந்தவித அசாதாரண அல்லது அமானுஷ்ய நிகழ்வுகளும் நடைபெறவில்லை என உறுதிசெய்து சான்றிதழ் தருபவர்களுக்கு, ஒரு இரவுக்கு ₹52,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த விசித்திரமான வேலை தற்காலிகமாக இளைஞர்கள் மத்தியிலும் இணையத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
