CRIME
“24 மணி நேரமும் பாலியல் சேவை கிடைக்கும்” மனைவி, மச்சினிச்சி போட்டோவை ஆபாசமாகச் சித்தரித்து போஸ்ட் போட்ட கணவன்… தட்டிக்கேட்ட மனைவியை மாமியாருடன் சேர்ந்து தாக்கிய அவலம்..!!
மதுரையில், சொந்த மனைவியையும் அவரது தங்கையையும் ஆபாசமாகச் சித்தரித்து, “24 மணி நேரமும் பாலியல் சேவை கிடைக்கும்” என்ற வாக்கியத்துடன் கணவரே சமூக வலைதளங்களில் பதிவிட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மனைவியின் செல்போன் எண்ணிற்குத் தொடர்ந்து அறிமுகமில்லாத எண்களிலிருந்து அழைப்புகள் வந்து, பலர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது கணவரிடமே இதுகுறித்துக் கேட்டு முறையிட்டுள்ளார். அப்போது, நியாயம் கேட்பதற்குப் பதிலாகக் கணவரும் அவரது தாயாரும் சேர்ந்து அப்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சமயநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
