9 வயது சிறுவன் பலி முதல் குடும்பப் பழிவாங்கல் வரை… ஒரே நாளில் தமிழகத்தை உலுக்கிய 12 தொடர் கொலைகள்… சட்டம் ஒழுங்கு எங்கே போனது..? அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

9 வயது சிறுவன் பலி முதல் குடும்பப் பழிவாங்கல் வரை… ஒரே நாளில் தமிழகத்தை உலுக்கிய 12 தொடர் கொலைகள்… சட்டம் ஒழுங்கு எங்கே போனது..? அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

Published

on

தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து 12 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி ஈத்தாமொழி அருகே சிங்கம் மற்றும் லிங்கசாமி ஆகியோரும், நாகர்கோவிலில் தங்கப்பாண்டியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டையில் 9 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தலைநகர் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும், மறைமலைநகரில் வடமாநில நபர் ஒருவரும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல், காரைக்குடியில் மணிகண்டன், சோழவந்தானில் சித்திக், திருவண்ணாமலையில் துனிக்கானம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் ராமசாமி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகப் பழனியில் தங்கையின் கணவரும், கிருஷ்ணகிரியில் மனைவியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in