சோகம்..! பிரபல கவிஞர் புவியரசு காலமானார்… தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சோகம்..! பிரபல கவிஞர் புவியரசு காலமானார்… தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு..!!

Published

on

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு (96) இன்று காலமானார். சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

இலக்கியப் பணிக்காக இருமுறை சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் புவியரசு. கடந்த 2007ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதையும், 2009ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். மேலும், இவர் எழுதிய ‘முக்கூடல்’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in