LATEST NEWS
ஆட்டம் ஆரம்பம்..! ஜெயலலிதா பாணி அரசியலை கையிலெடுக்கும் CM விஜய்… சரத்குமார் உட்பட 3 அமைச்சர்கள் நீக்கம்..? தவெகவில் பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழவுள்ளதாகவும், சர்ச்சைகளில் சிக்கிய சில அமைச்சர்களை நீக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் சரத்குமாரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் சேர்த்து, அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரின் அமைச்சர் பதவிகளும் பறிக்கப்படும் சூழல் நிலவுவதாகத் தெரிகிறது.
இந்த அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் அமைச்சர்கள் நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்களைத் தெரிவிப்பதற்காகவே, சபாநாயகர் தற்போது ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க அரசு பதவியேற்ற சில காலத்திற்குள்ளேயே அமைச்சர்கள் மீது எழுந்துள்ள புகார்களுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்கத் துணிந்துள்ளார். முதலமைச்சரின் இந்த அதிரடி முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி ஆக்ஷன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் பாணியை நினைவூட்டும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவறு செய்யும் அமைச்சர்களை உடனுக்குடன் பதவியில் இருந்து நீக்கி அதிரடி காட்டும் ஜெயலலிதாவின் அதே பாணியை விஜய்யும் கையில் எடுத்துள்ளதாகப் பேசப்படுகிறது. இந்த அமைச்சரவை புனரமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
