செம ஷாக்..! முதல்வராக திருமாவளவன்…? ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்…. காதர் மொய்தீன் உடைத்த பரபரப்பு உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம ஷாக்..! முதல்வராக திருமாவளவன்…? ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்…. காதர் மொய்தீன் உடைத்த பரபரப்பு உண்மை..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடிய சமயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனியாரிடம் எடப்பாடி கே. பழனிசாமி அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி செய்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தலைவர் காதர் மொய்தீன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி பேட்டியொன்றில் பேசிய அவர், முதல் நாளில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்கலாம் என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்த நாள், விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக அவர் பரிந்துரைத்ததாகவும் காதர் மொய்தீன் வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், திருமாவளவன் அப்போது சட்டமன்ற உறுப்பினராக கூட இல்லாத நிலையில், அவரை முதலமைச்சராக்குவதை மக்கள் எப்படி ஏற்பார்கள் என்று தாம் கேள்வி எழுப்பியதாகக் காதர் மொய்தீன் குறிப்பிட்டுள்ளார். ஆறு மாதத்திற்குள் அவரை எம்.எல்.ஏ ஆக்கிவிடலாம் என திமுக தரப்பில் கூறப்பட்ட போதிலும், இந்த அரசியல் நகர்வுகளைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் நிலவியதாகக் கூறியுள்ளார். இத்தகைய தொடர் அரசியல் குழப்பங்களுக்குப் பின்னரே, முஸ்லிம் லீக் கட்சியின் மேல்மட்டக் கூட்டத்தைக் கூட்டி, இறுதியாகத் தமிழ்நாட்டில் த.வெ.க அரசு அமைய ஆதரவளிப்பது என்ற தீர்க்கமான முடிவை எடுத்ததாக அவர் தனது பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளார்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in