LATEST NEWS
தீய சக்திகளுடன் இணையத் துடிப்பதா..? “என் மனம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறது” EPS க்கு எதிராக எம்.ஆர் விஜயபாஸ்கர் பரபரப்பு அறிக்கை..!!
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகள் கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளதாக, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ள அவர், தற்போதைய தலைமையின் செயல்பாடுகள் தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தனை ஆண்டுகள் எந்த அரசியல் சக்திகளை தீய சக்திகள் என்று எதிர்த்துப் போராடினோமோ, இன்று அதே சக்திகளுடன் இணைந்து, அவர்களின் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தற்போதைய தலைமை முற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் நகர்வுகளைக் கண்டு தனது மனம் ரத்தக்கண்ணீர் வடிப்பதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தலைமையின் இத்தகைய கொள்கையற்ற, சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்கு தங்களைப் போன்ற உண்மையான தொண்டர்கள் பலியாகத் தயாராக இல்லை என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இவரது இந்த அதிரடி விலகலும் குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
