LATEST NEWS
உஷார்!இன்று முதல் எல்லாமே மாறுது! ரயில்வே அபராதம் முதல் பாஸ்போர்ட் வரை கட்டண உயர்வு..அரசின் அதிரடி உத்தரவு…!!
இந்தியாவில் இன்று முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல்வேறு முக்கிய விதிமுறைகளும், சேவைகளுக்கான கட்டணங்களும் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய ரயில்வேயில் உரிய பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கான குறைந்தபட்ச அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டு, ₹250-லிருந்து ₹500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கான பிரத்யேகப் பெட்டிகளில் அனுமதியின்றி பயணிக்கும் ஆண்களுக்கு ₹2,500 வரை அபராதம் விதிக்க புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தவிர, வெளியுறவு அமைச்சகம் சாதாரண பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பக் கட்டணத்தை ₹1,500-லிருந்து ₹2,500 ஆகவும், அவசரத் தேவைகளுக்கான தட்கல் பாஸ்போர்ட் கட்டணத்தை ₹5,000 ஆகவும் உயர்த்தியுள்ளது.
நிதி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, கிரெடிட் கார்டு விதிகளில் எச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ நிறுவனங்கள் சில மாற்றங்களைச் செய்துள்ளன. இனி எச்டிஎஃப்சி கார்டு வைத்திருப்பவர்கள் இலவச விமான நிலைய லவுஞ்ச் வசதியைப் பெற, முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் ₹60,000 செலவு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய அறிவிப்பாக, ஆதார் பயனர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியை மொபைல் செயலி மூலம் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள டிசம்பர் இறுதி வரை சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் தவறான தகவல்களைக் கூறி வாடிக்கையாளர்களுக்குக் காப்பீடுகளை விற்றால் முழுத் தொகையையும் திரும்பப் பெற வழிவகை செய்யும் புதிய பாதுகாப்பு அமைப்பை ரிசர்வ் வங்கி அமல்படுத்துகிறது.
