LATEST NEWS
“நீ நடக்கவே முடியாதுன்னாங்க” ஆனா இப்போ… நெதர்லாந்தை அலறவிட்ட மொராக்கோ வீரர்.. மைதானத்திலேயே மகனை கட்டிப்பிடித்து அழுத தாய்… கோடிக்கணக்கானோரை அழ வைத்த அந்த ஒரு நொடி..!!
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் மொராக்கோ அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் மொராக்கோ அணியின் நட்சத்திர வீரரான இஸ்மாயில் சைபாரி வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி, தனது அணியை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறச் செய்தார். மைதானமே இந்த வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், சைபாரி நேராக மைதானத்தின் கேலரி பகுதிக்கு ஓடிச்சென்று, அங்கு நின்றிருந்த தனது தாயைக் கட்டிப்பிடித்து தனது பாசத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தில் அவரது தாய் கண்கலங்கி அழுததும், சைபாரி தனது தாயின் நெற்றியில் முத்தமிட்டதும் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் நெகிழச் செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில், இதற்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கடந்த காலம் உள்ளது. சைபாரி குழந்தையாக இருந்தபோது அவரது இரண்டு கால்களிலும் கடுமையான பிறவிக் குறைபாடு இருந்தது. இதனால் அவர் தனது வாழ்நாளில் சாதாரண மனிதர்களைப் போல நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் கூறியிருந்தனர்.
https://twitter.com/i/status/2071808997066187170
தங்கள் மகன் சாதாரண மனிதனைப் போல நடந்தால் போதும் என்று அவரது தாய் இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்து வந்தார். ஆனால், தாயின் பிரார்த்தனை, குடும்பத்தின் ஆதரவு மற்றும் சைபாரியின் அசாத்திய மனஉறுதி ஆகியவற்றின் காரணமாக, நடக்கவே முடியாது என்று கூறப்பட்ட சிறுவன் இன்று உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாயகனாக உருவெடுத்துள்ளார். பல ஆண்டுகால பயம், தியாகம் மற்றும் நம்பிக்கையின் பலனாக வெளிப்பட்ட இந்தத் தாயின் கண்ணீரும் மகனின் பாசமும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.
