“ஏன்யா இப்படி பண்ணிறீங்க.. லைவ் போட்டுட்டு தொட்டிக்குள் குதித்த நபர்.. அடுத்த நொடியே நடந்த பேரதிர்ச்சி.. நெட்டிசன்களை உரைய வைத்த டிக் டாக் நேரலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏன்யா இப்படி பண்ணிறீங்க.. லைவ் போட்டுட்டு தொட்டிக்குள் குதித்த நபர்.. அடுத்த நொடியே நடந்த பேரதிர்ச்சி.. நெட்டிசன்களை உரைய வைத்த டிக் டாக் நேரலை..!!

Published

on

டிக் டாக் தளத்தில் நேரலை செய்து கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் தண்ணீர்த் தொட்டிக்குள் தலைகீழாகக் குதித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேரலையில் தனது பார்வையாளர்களைக் கவர்வதற்காக, அந்த இளைஞர் யோசிக்காமல் சிறிய தண்ணீர்த் தொட்டிக்குள் பாய்ந்துள்ளார். ஆனால், தொட்டிக்குள் குறைந்த அளவே இடம் இருந்ததால், உள்ளே சென்ற பிறகு அவரால் உடலைத் திருப்பவோ அல்லது மேலே வரவோ முடியாமல் போயுள்ளது.

🔴TikTok’ta canlı yayında ölüm

TikTok’ta canlı yapan genç Su tankına kafa üstü girdi. Yeterli yerin olmaması nedeniyle dönemeyen genç canlı yayında boğularak hayatını kaybetti pic.twitter.com/E0XOsLQFYE— Rota News (@xrotanews) August 8, 2026

தொட்டிக்குள் சிக்கிக்கொண்ட அந்த இளைஞர், மூச்சுத்திணறி நீரில் மூழ்கி நேரலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லைக்ஸ்களுக்கும் சமூக வலைதளப் பிரபலத்திற்கும் ஆசைப்பட்டு, எந்தவிதப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் இன்றி ஆபத்தான செயல்களில் ஈடுபடும் கலாச்சாரம் இளைஞர்களின் உயிரைப் பறிப்பதற்கு இச்சம்பவம் மற்றொரு கொடூர சான்றாக அமைந்துள்ளது. இணையத்தில் கவனம் ஈர்க்க உயிரைப் பணயம் வைக்கும் மனநிலை குறித்து இச்சம்பவம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in