குட் நியூஸ்..! வசதி குறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு செலவில் கார்… வி.சி.க. கேட்டதும் முதல்வர் விஜய் போட்ட மாஸ் பிளான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட் நியூஸ்..! வசதி குறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு செலவில் கார்… வி.சி.க. கேட்டதும் முதல்வர் விஜய் போட்ட மாஸ் பிளான்..!!

Published

on

சட்டமன்றத்தில் வி.சி.க. எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசுகையில், வசதி குறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு செலவில் கார் மற்றும் உதவியாளர்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வசதி குறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதற்கு முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதற்கான நிதியை முழுமையாக அரசு செலவிலேயே ஏற்பதா அல்லது முதல்வரின் சொந்த நிதியில் இருந்து வழங்குவதா என்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

அதேநேரத்தில், தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரசு செலவிலேயே கார்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கான மாத தவணைத் தொகையை எம்.எல்.ஏ.க்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்வது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in