LATEST NEWS
“அவனை உடனே தூக்குங்க” ராணுவ ரகசியங்களை கசியவிட்ட துரோகிகள் யார்..? 50 டாப் அதிகாரிகளை வளைத்து டிரம்ப் அரசு அதிரடி வேட்டை… பெரும் பரபரப்பு..!!
அமெரிக்க ராணுவத்தின் அதிமுக்கிய ரகசியங்கள் ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, பென்டகனில் பணியாற்றும் 50 உயர் ராணுவ அதிகாரிகளுக்கு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிரடியாக உண்மை கண்டறியும் சோதனையை நடத்தியுள்ளது. ஈரானுடன் போர் தீவிரமடைந்து வரும் இச்சூழ்நிலையில், அமெரிக்காவிடம் ஏவுகணைகள் மற்றும் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இந்தத் தகவல்களைப் பத்திரிகையாளர்களுக்குக் கசியவிட்டது யார் என்பதைக் கண்டறியவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தின் ஒரு பகுதியாக, ‘ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸ்’ (Stars and Stripes) என்ற ராணுவ செய்தித்தாளின் முதன்மை ஆசிரியர் எரிக் ஸ்லாவின் உட்பட மூன்று மூத்த பத்திரிகையாளர்களைப் பென்டகன் நிர்வாகம் ஏற்கனவே பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்துப் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் கருத்து தெரிவிக்க மறுத்த போதிலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் கசிவதை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
