பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா… கொட்டைப் பாக்குக்கு பதில் சொல்றாரு முதல்வர் விஜய்… சட்டப்பேரவை நிகழ்வு குறித்து எ.வ.வேலு காட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா… கொட்டைப் பாக்குக்கு பதில் சொல்றாரு முதல்வர் விஜய்… சட்டப்பேரவை நிகழ்வு குறித்து எ.வ.வேலு காட்டம்..!!

Published

on

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக கொறடா எ.வ.வேலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், தற்போது நடக்கும் குற்றங்கள் குறித்தும் நாங்கள் கேள்வி எழுப்பினால், அதற்குப் பதிலளிக்காமல் முதலமைச்சர் விஜய் பழைய எமெர்ஜென்சி கால மிசா மற்றும் சர்க்காரியா ஆணையம் குறித்துப் பேசுகிறார்” என்று குற்றம் சாட்டினார். இதைக் குறிப்பிடும் விதமாகவே, “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு முதலமைச்சர் பதில் சொல்கிறார்” என்று எ.வ.வேலு பழமொழியை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தோ அல்லது அவையில் இல்லாத தலைவர்கள் குறித்தோ சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்ற விதிகள் உள்ளன. ஆனால், இந்த விதிகளை மீறி எதிர்க்கட்சிகளை அசிங்கப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் விஜய் அவையில் பொய்யான தகவல்களைப் பேசியுள்ளதாக எ.வ.வேலு சாடியுள்ளார். மிசாவில் சிறை சென்று தியாகம் செய்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பை முதலமைச்சர் கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும், தவெக அரசு ஒரு ‘ரீல் அரசு’ நடத்தி வருவதாகவும் எ.வ.வேலு தனது பேட்டியில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in