LATEST NEWS
மெஸ்ஸி, ரொனால்டோ எல்லாம் லிஸ்ட்லயே இல்ல..! உலகின் மிகப்ப பணக்கார கால்பந்து வீரர் இவர்தான்.. யார் தெரியுமா..?!
புருனே அரச குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்க கால்பந்து வீரரான ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியா, போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட 13 மடங்கு பணக்காரர் என தெரியவந்துள்ளது. புரூனே சுல்தானும், உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தற்போதைய மன்னருமான ஹஸ்ஸனால் போல்கியாவின் மருமகன் ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியா. 28 வயதாகும் இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். மிக இளம் வயதில் AFC Newbury கால்பந்து அணிக்காக விளையாட ஆரம்பித்த இவர், பின்னர் சௌதம்டான், செல்ஸி மற்றும் லெய்செஸ்டர் சிட்டி அணிகளில் விளையாடினார்.
சீனியர் அணி வீரராக மரிடிமோ (2), மரிடிமோ பி (6) அணிகளுக்காக விளையாடினார். 2021-23 சீஸன்களில் சோன்புரி அணிக்காக 32 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் ஃபாய்க் ஜெஃப்ரி அடித்தார். அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, தாய் லீக் 1 எனும் தாய் பிரிவில் கையெழுத்திட்ட முதல் புருனே வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்னர் 2023-2026 சீஸன்களில் 18 போட்டிகளில் 2 கோல்கள் அடித்தார். அதே சமயம் சர்வதேச அணியான புருனேவுக்காக 6 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கிளப் போட்டிகளில் 5 ஆண்டுகளில் 50 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஃபாய்க் ஜெஃப்ரி, ஜூலையில் Ratchaburi அணியால் விடுவிக்கப்பட்டார். இது அவருக்கு ஒரு சராசரி தொழிலாளியாகக் கடினமாக இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியா தனது மாமா வழங்கும் 30-50 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவுத் தொகையை நம்பியிருக்க முடிகிறது. தனது மாமாவின் சொத்துக்களுக்கு நேரடி வாரிசாக இவர் இல்லாவிட்டாலும், இந்தத் தொகையின் காரணமாக “உலகின் மிகப் பெரிய பணக்கார கால்பந்து வீரர்” என்று அழைக்கப்படுகிறார். அதாவது, போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட போல்கியா 13 மடங்கு பணக்காரர் ஆவார். Forbes இதழின் தகவல்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் முறையே 1.1 பில்லியன் டொலர் மற்றும் 1.2 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆனால், ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியாவின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
