LATEST NEWS
அவ்வளவு வெறி மனுஷனுக்கு..! கால்பந்து Match பார்ப்பதற்காக கணவர் செய்த செயல்… அலறிக்கொண்டு போலீசுக்கு போன் செய்த மனைவி… பெரும் பரபரப்பு..!!
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் கால்பந்து போட்டியை எந்தவித தொந்தரவும் இல்லாமல் காண்பதற்காக, தனது மனைவியை நாற்காலியுடன் சேர்த்து கட்டிப்போட்ட 64 வயதான கணவர் ரெர்ரி வார்ட் என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சர்வதேச செய்திப் பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து விளையாட்டின் மீதுள்ள அசாத்திய வெறியின் காரணமாக அந்த நபர் இந்த வினோதமான செயலில் ஈடுபட்டுள்ளார். நாற்காலியில் கட்டிவைக்கப்பட்ட அவரது மனைவி, எப்படியோ காவல்துறைக்குத் தகவல் கொடுத்து உதவிக்கு அழைத்ததால் இந்தச் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மனைவியை மீட்டதோடு கணவர் ரெர்ரி வார்டைக் கைது செய்தனர். அவர் மீது குடும்ப உறுப்பினர் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
