LATEST NEWS
யாரு சாமி இவரு..? “அட்லாண்டிக் கடலுக்கு என் பெயரை வைங்க” சுந்தர் பிச்சையிடம் அடம்பிடித்த டிரம்ப்… அவர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூகுள் மேப்ஸில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை “டிரம்ப் பெருங்கடல்” என மாற்றுமாறு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அவர் அதனை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே டிரம்ப் இந்த சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரை புத்திசாலிகள் எனப் பாராட்டிய டிரம்ப், அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்ற முடியுமா என்று சுந்தர் பிச்சையிடம் கேட்டதற்கு, “வேண்டாம் சார், இந்த முறை என்னால் இதைச் செய்ய முடியாது; பெருங்கடல்கள் பல நாடுகளின் எல்லைகளைக் கொண்டுள்ளன, எனவே தயவுசெய்து எங்களிடம் இதைக் கேட்க வேண்டாம்” என்று கூறி சுந்தர் பிச்சை தன் கோரிக்கையை நிராகரித்ததாக டிரம்ப் சிரித்துக்கொண்டே கூறினார். அமெரிக்காவில் கூகுள் மேப்ஸ் சில ஏரிகள் மற்றும் வளைகுடாக்களின் பெயர்களை மாற்றியதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த கோரிக்கையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
