உச்சக்கட்ட கொடூரம்..! காதலிக்கு ஆபாச மெசேஜ்.. பள்ளித் தோழரை அடித்துக்கொன்ற காதலன்.. சென்னையில் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சக்கட்ட கொடூரம்..! காதலிக்கு ஆபாச மெசேஜ்.. பள்ளித் தோழரை அடித்துக்கொன்ற காதலன்.. சென்னையில் பயங்கரம்..!!

Published

on

சென்னையை அடுத்த மாங்காடு கொழுமண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (20) என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவனேஷ், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்தப் பெண் யுவனேஷின் பள்ளித் தோழனான தேவதயாளன் என்ற விக்கி (20) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவனேஷ், அந்தப் பெண்ணின் செல்போனுக்குத் தொடர்ந்து ஆபாசமான வீடியோக்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பித் தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து அந்தப் பெண் தனது காதலன் விக்கியிடம் முறையிட்டுள்ளார்.

Advertisement

தகவலறிந்து கோபமடைந்த விக்கி, தனது நண்பரான பார்த்திபன் (26) என்பவருடன் சேர்ந்து யுவனேஷை மது அருந்த அழைத்துள்ளார். கொழுமண்ணிவாக்கத்தில் உள்ள ஒரு காலி மைதானத்தில் வைத்து யுவனேஷுக்கு அதிகளவில் மது கொடுத்துவிட்டு, குறுஞ்செய்தி விவகாரம் தொடர்பாகத் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் விக்கியும் பார்த்திபனும் சேர்ந்து யுவனேஷை பாட்டில் மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடலில் கல்லைக் கட்டி பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு, இருவரும் மாங்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in