ரோடு ஷோவில் நேர்ந்த அசம்பாவிதம்…! கார் மீது பறந்து வந்த பாட்டில்.. அதிர்ந்துபோன முதல்வர் விஜய்..! மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரோடு ஷோவில் நேர்ந்த அசம்பாவிதம்…! கார் மீது பறந்து வந்த பாட்டில்.. அதிர்ந்துபோன முதல்வர் விஜய்..! மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Published

on

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின்னர், அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். அவரை வரவேற்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

முதலமைச்சர் விஜய் சென்ற வாகனம் பொதுமக்கள் திரண்டிருந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்து குளிர்பான பாட்டில் ஒன்று அவரது வாகனத்தை நோக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாட்டில் திடீரென பறந்து வந்ததைப் பார்த்த அவர் ஒரு நொடி அதிர்ந்து போனார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in