“என் ஆளுக்கே தப்பா மெசேஜ் பண்ணுவியா..?” பள்ளி நண்பன் என்றும் பாராமல் வாலிபரை கொடூரமாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காதலன்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் ஆளுக்கே தப்பா மெசேஜ் பண்ணுவியா..?” பள்ளி நண்பன் என்றும் பாராமல் வாலிபரை கொடூரமாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காதலன்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே, தனது காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்த பள்ளி நண்பன் யுவனேஷ் என்பவரைக் காதலனே அடித்துக் கொலை செய்து சடலத்தைக் கல்லுடன் கட்டி பாழுங்கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கொழுமணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ், தன் தோழியான இளம்பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண், யுவனேஷின் பள்ளி நண்பரான விக்கி என்பவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த யுவனேஷ், பழிவாங்கும் நோக்கில் அந்தப் பெண்ணிற்குத் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த காதலி விக்கியிடம் கூறி அழவே, நண்பன் என்றும் பாராமல் யுவனேஷைத் தீர்த்துக்கட்ட விக்கி முடிவு செய்துள்ளார்.

இதற்காக விக்கி தனது மற்றொரு நண்பரான பார்த்திபனை கூட்டாகச் சேர்த்துக்கொண்டு, யுவனேஷை மது அருந்தலாம் என நைசாகக் கூறி காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து, போதை தலைக்கேறியதும் கட்டை மற்றும் பாட்டிலால் சரமாரியாக அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக யுவனேஷின் உடலில் பெரிய கல்லைக் கயிற்றால் இறுக்கிக் கட்டி அருகில் இருந்த பாழுங்கிணற்றில் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். எனினும், போலீசில் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் கொலையாளிகள் இருவரும் மாங்காடு காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தனர். போலீசார் அவர்கள் சுட்டிக்காட்டிய கிணற்றிலிருந்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in