“தவெகவுக்கு சாவு மணி அடிப்போம்…” மதுராந்தகத்தில் நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தவெகவுக்கு சாவு மணி அடிப்போம்…” மதுராந்தகத்தில் நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பேச்சு..!!

Published

on

நயினார் நாகேந்திரன் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வரும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு சாவு மணி அடிப்போம் என மிகக் காரமாகச் சாடினார். மேலும், ரூ.50 கோடி பெற்றுக்கொண்ட மரகதம் குமரவேல் தவெக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்று பகிரங்கமான குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

தொடர்ந்து தவெக ஆட்சியை விமர்சித்து பேசிய நயினார் நாகேந்திரன், இங்கு ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது என்றும், மக்களின் வரிப்பணம் தேவையின்றி வீணடிக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார். மேலும், கட்சியின் N.ஆனந்த் மற்றும் ஆதவ் ஆகியோரைத் தவிர்த்து, மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் காது கொடுத்துக் கேட்பதே இல்லை என்றும் தனது பேச்சில் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in