“இனி இவள் என் மகளே இல்லை..!”காதலனுடன் சேர்ந்து சொந்த குடும்பத்திற்கே ஆப்பு வச்ச 18 வயது பெண்.. கதறி துடிக்கும் பெற்றோர்.. பரபரப்பு பின்னணி.. – cinefeeds
Connect with us

CRIME

“இனி இவள் என் மகளே இல்லை..!”காதலனுடன் சேர்ந்து சொந்த குடும்பத்திற்கே ஆப்பு வச்ச 18 வயது பெண்.. கதறி துடிக்கும் பெற்றோர்.. பரபரப்பு பின்னணி..

Published

on

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், 18 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் நடந்த பிறகு, அப்பகுதியில் இருந்த சிசிடிவிகாட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்தபோதுதான் இந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது. இதனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர். இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சாக்ஷி என்ற அந்தப் பெண்ணையும், அவருடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்த அவரது காதலன் உஜ்ஜவல் திவேதியையும் போலீஸார் நேத்து கைது செய்தனர். மேலும், இக்கொள்ளைச் சம்பவத்திற்கு உதவியாக இருந்த பெண்ணின் தோழி உட்பட தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களாக அந்த இளம் பெண் தனது காதலனுடன் லிவ்-இன் உறவில் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெற்ற வளர்ப்பையும் மீறி சொந்த வீட்டிலேயே இத்தகைய பெரும் துரோகத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுடனான அனைத்து உறவுகளையும் முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்வதாக கண்ணீருடன் அறிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in