LATEST NEWS
“கண்ணை கண்லங்குது..!” 3 மாதமாக காணாமல் போன மனைவி.. சாலையோரம் இருந்த கோலத்தை பார்த்து கதறிய கணவன்.. நெட்டிசன்களை உருகவைத்த வீடியோ…!!
இந்தியாவில் தனது வீட்டை விட்டு வெளியேறி வழிதெரிந்து வேறு ஒரு கிராமத்திற்குச் சென்ற பெண் ஒருவர், தனது பெயரைக்கூட நினைவுகூர முடியாத நிலையில் சாலையோரம் அமர்ந்து உணவுக்காக யாசித்துக் கொண்டிருந்தபோது, 3 மாதங்களாகத் தேடி அலைந்த அவரது கணவர் ஒரு ஃபேஸ்புக் வீடியோ மூலம் அவரைக் கண்டடைந்து மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘ரபியுல்’ என்ற உள்ளடக்க உருவாக்குநர் சாலையோரம் தவித்துக் கொண்டிருந்த இப்பெண்ணைக் கண்டு, அதை வீடியோவாகப் பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி, ஒருகட்டத்தில் அவரது கணவரின் கண்களில் பட்டுள்ளது; உடனடியாகத் தனது மனைவியைத் தேடி அவர் ஓடிவந்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் தான் எங்கு வசித்து வந்தோம் என்பதை முழுமையாக மறந்திருந்தபோதிலும், தனது கணவரைக் கண்ட அடுத்த கணமே தனது நிலையையும் மீறி அவரை அடையாளம் கண்டுகொண்டார். மனைவியைக் கண்டதும் குழந்தையைப் போலக் கதறி அழுத அவரது கணவரின் பாசத்தைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், ஆரம்பத்தில் அவர் தனது தாய்க்காகத்தான் அப்படி அழுகிறார் என்று நினைக்கும் அளவிற்கு அந்த நெகிழ்ச்சிப் போராட்டம் அமைந்திருந்தது. 3 மாதங்கள் கடந்தும் தனது மனைவியைத் தேடும் முயற்சியைக் கைவிடாத அந்தக் கணவரின் ஆழமான அன்பும் காதலும், இன்றைய காலகட்டத்தில் அரிதாகக் காணப்படும் ஒரு உன்னதமான மனிதநேயத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.
