“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” பெண் தெரு நாயை கொடூரமாக சித்திரவதை செய்த காம மிருகத்தின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” பெண் தெரு நாயை கொடூரமாக சித்திரவதை செய்த காம மிருகத்தின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் மனிதநேயமற்ற முறையில் தெரு நாய் ஒன்றுக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர், ஒரு பெண் தெரு நாயை மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி அந்தப் பாவப்பட்ட வாயில்லா ஜீவனின் இரண்டு கண்களையும் மிகக் கொடூரமாகத் தோண்டி எடுத்து சித்திரவதை செய்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த விலங்கு நல மீட்புக் குழுவினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண் நாயை மீட்டனர். தற்போது அந்த நாய் அவசரச் சிகிச்சைக்காக அமிர்தசரஸில் உள்ள சுகர்புரா கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட அந்த வக்கிர புத்தி கொண்ட நபரைக் காவல்துறையினர் உடனடியாக அடையாளம் கண்டு, போக்சோ அல்லது விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in