“அய்யோ கொடுமையே.. லண்டன் மாப்பிள்ளைன்னு நம்பி நிச்சயம் பண்ணிய குடும்பம்..!” உண்மை தெரிந்ததும் இளம்பெண் எடுத்த கொடூர முடிவு…! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ கொடுமையே.. லண்டன் மாப்பிள்ளைன்னு நம்பி நிச்சயம் பண்ணிய குடும்பம்..!” உண்மை தெரிந்ததும் இளம்பெண் எடுத்த கொடூர முடிவு…! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

Published

on

வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை என நம்பி திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவர் உண்மையில் லண்டனில் வேலை பார்க்கவில்லை என்பதும், கோழிக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமணத்தை நிறுத்த குடும்பத்தினர் முடிவு செய்த நிலையில், ஏற்பட்ட மன உளைச்சலில் பொறியியல் பட்டதாரியான இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அவரை காப்பாற்ற முயன்ற தந்தையும் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த இளம்பெண் லேகா, பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருந்தார். மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்த நபர் லண்டனில் வேலை பார்த்து வருவதாக கூறப்பட்டதால், குடும்பத்தினரும் அந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு லேகாவும் அந்த இளைஞரும் திருமண வாழ்க்கை குறித்து பேசி நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாப்பிள்ளையின் வேலை தொடர்பாக சந்தேகமடைந்து விசாரித்தபோது, அவர் லண்டனில் வேலை செய்யாமல் கோழிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்து, லேகாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். ஆனால், ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து திருமண வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த லேகா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு லேகா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

Advertisement

இந்த மன உளைச்சலின் காரணமாக லேகா எதிர்பாராத வகையில் தன் வீட்டின் உள்ளேயே உயிரை மாய்த்துக் கொண்டார். தீக்காயங்களுடன் இருந்த மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை குமாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி லேகா உயிரிழந்தார்; தந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமண வரன் பார்க்கும்போது வேலை மற்றும் பின்னணித் தகவல்களை முன்கூட்டியே சரிபார்ப்பதன் அவசியத்தை உணர்த்தும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in