LATEST NEWS
“நடிகை த்ரிஷாவுக்கு ஒரு நீதி, கலெக்டருக்கு ஒரு நீதியா..?” CM விஜய்க்குப் புது நெருக்கடி.. கொதித்தெழும் எதிர்க்கட்சிகள்.. தமிழக அரசியலில் உச்சக்கட்ட மோதல்..!!
நடிகை த்ரிஷா குறித்துப் பேசியதாக திமுக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தமிழக அரசியலில் இரட்டை நிலைப்பாடு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட நடிகை த்ரிஷா இதுவரை எந்தப் புகாரும் அளிக்காத நிலையிலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணே நேரடியாகப் புகார் அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தரப்பில் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் விமர்சகர்களிடையே கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருபுறம் புகாரே இல்லாமல் எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதும், மறுபுறம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் ஆளும் கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் பாரபட்சமான செயல் என விமர்சகர்கள் சாடுகின்றனர். அடுத்தடுத்து எழும் இந்தச் சர்ச்சைகளும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
