“போலீஸ் வேலையால் எனக்கு பகை மட்டும்தான் மிஞ்சியது…” நேர்மையாக இருந்ததற்கு இதுதான் பரிசா..? பணிநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போலீஸ் வேலையால் எனக்கு பகை மட்டும்தான் மிஞ்சியது…” நேர்மையாக இருந்ததற்கு இதுதான் பரிசா..? பணிநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

Published

on

நாகர்கோவில், குமரி மாவட்டம் சொத்தவிளையைச் சேர்ந்தவர் திலீபன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். எவ்வித முன் அனுமதியோ, தகவலோ இன்றி 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில், அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், திலீபன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “27 விபசார வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் எனது வீட்டு வாசலுக்கு ஆட்டோவில் வந்து என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டுச் சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் அவர் பேசுகையில், “நான் சிறப்புப் பிரிவில் இருந்த போது, பல முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்து பாலியல் தொழில் புரோக்கராகச் செயல்பட்டு வந்த ஒருவரைக் கைது செய்துள்ளேன். காவல்துறையில் நான் எவ்வளவு பகையைச் சம்பாதித்து வைத்துள்ளேன் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in