LATEST NEWS
விநோதமா இருக்கே..! புருஷனை விட “பன்றி” தான் முக்கியம்னு.. 10 வருஷ தாம்பத்தியத்தை முறித்த மனைவி… விவாகரத்துக்கான காரணத்தைக் கேட்டா அதிர்ந்து போவீங்க..!!
அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லா தாம்சன் என்ற பெண், வீட்டில் பன்றிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவரது கணவருக்கு வீட்டில் விலங்குகளை வளர்ப்பதில் விருப்பம் இல்லாததால், பன்றி வளர்ப்பதற்குத் தொடர்ந்து தடை விதித்து வந்தார். தமது ஆசைக்குத் தடையாக இருக்கும் கணவருடன் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை எனக் கருதிய கெய்லா, 10 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்துப் பெற்றார்.
விவாகரத்துப் பெற்ற உடனேயே தனது ஆசையை நிறைவேற்றும் விதமாக, கெய்லா ஒரு பன்றிக்குட்டியைத் தத்தெடுத்து அதற்கு ‘டெய்ஸி’ எனப் பெயரிட்டார். மேலும், பன்றிக்குட்டியை மடியில் வைத்துப் பால் புட்டியுடன் இருக்கும் புகைப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த அவர், “என் வாழ்க்கையில் இருந்த ஒரு பன்றியை நீக்கிவிட்டு, அதற்குப் பதில் உண்மையான பன்றி ஒன்றைத் தத்தெடுத்துக் கொண்டேன்” எனத் தனது முன்னாள் கணவரைக் கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டார்.
கெய்லாவின் இந்தப் பகிரங்கப் பதிலடி இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பன்றிக்காக 10 ஆண்டுகள் வாழ்ந்த கணவரை விவாகரத்து செய்த இந்த வினோத முடிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
