நம்பவே முடியல சார்…! 180 டன் எடையுள்ள விமானத்தை 2 சக்கரங்களில் இழுத்துச் சென்ற எலக்ட்ரிக் கார்.. ஆட்டோமொபைல் உலகையே அதிரவைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்பவே முடியல சார்…! 180 டன் எடையுள்ள விமானத்தை 2 சக்கரங்களில் இழுத்துச் சென்ற எலக்ட்ரிக் கார்.. ஆட்டோமொபைல் உலகையே அதிரவைத்த வீடியோ..!!

Published

on

சீனாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD)-யின் ‘டென்சா பாவோ 5’ ஹைப்ரிட் எஸ்யூவி கார், முழுமையான மின்சக்தியைப் பயன்படுத்தி 180 டன் எடையுள்ள பிரம்மாண்ட போயிங் 747-400 (Boeing 747-400) விமானத்தை வெறும் 2 சக்கரங்களில் 1,600 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளது.

இந்தச் சவாலான முயற்சியின்போது, முதலில் 4 சக்கரங்களிலும், பின்னர் 3 சக்கரங்களிலும் விமானத்தை இழுத்துப் பரிசோதிக்கப்பட்டு, இறுதியாக 2 சக்கரங்களில் மட்டும் காரை இயக்கி இந்த அபார சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Advertisement

அதிக எடையுள்ள விமானத்தை இழுக்கும்போது காரின் சமநிலையை (Balance) துல்லியமாகப் பராமரிப்பதற்காக, காரின் உள்ளே இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு 4,500 கிலோ எடை ஏற்றப்பட்டதுடன், கூடுதல் நிலைப்படுத்திகளும் (Stabilizers) பொருத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in