“எங்க ரகசியம் இதுதான்… தாராளமாக காப்பியடித்துக் கொள்ளலாம்..” தமிழக அரசுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கொடுத்த நக்கலான பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க ரகசியம் இதுதான்… தாராளமாக காப்பியடித்துக் கொள்ளலாம்..” தமிழக அரசுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கொடுத்த நக்கலான பதிலடி..!!

Published

on

தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு தரவுகள் ஊழியர்கள் மூலம் ஆந்திராவிற்கு தெரியவந்து, அதனைவைத்து அவர்கள் முதலீடுகளை ஈர்த்துவருவதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கைடன்ஸ் அமைப்பில் இருந்து 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆந்திர அரசு, விரைவான முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களுடனான நேரடித் தொடர்பு மூலமே தாங்கள் முதலீடுகளை ஈர்ப்பதாகவும், ஆரோக்கியமான போட்டியையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த செய்திகள் குறித்து கிண்டலாக பதிலளித்துள்ளார் ஆந்திர தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ்.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முக்கியச் செய்தி: ஆந்திரப் பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு வியூகம் கசிந்துவிட்டது. அதன் பெயர் ‘முதலீட்டாளர்களுக்கு அன்றைய தினமே பதிலளிப்பது’. தாராளமாக இதைப் பார்த்துக் காப்பியடித்துக் கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in