LATEST NEWS
“என் புருஷனுக்குத் தெரிஞ்சிடுச்சு..” பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த சர்ச் பாதிரியார்.. ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்த கணவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினம் சிங்கித்துறை பகுதியைச் சேர்ந்த யுனோக் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த டெஸ்ஸி என்ற இளம்பெண்ணை 8 ஆண்டுகளாகக் காதலித்து கடந்த ஜனவரி மாதம் செல்வ மாதா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் யுனோக் வெளிநாட்டில் கப்பல் வேலைக்குச் சென்ற நிலையில், விடுமுறைக்காக கடந்த நவம்பர் 18-ஆம் தேதி ஊர் திரும்பினார். அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த யுனோக், அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, செல்வ மாதா ஆலயப் பாதிரியார் ஷிவாகருடன் அவர் திருமண உறவைத் தாண்டி நெருக்கமாகப் பழகி வந்ததும், இரவு நேரங்களில் வீடியோ அழைப்புகளில் பேசி வந்ததும் தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.
செல்போன் உரையாடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த யுனோக், இது குறித்து மனைவியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த நேரத்தில் டெஸ்ஸி பாதிரியார் ஷிவாகருக்கு போன் செய்து, தங்களுக்குள் இருந்த நெருக்கம் கணவருக்குத் தெரிந்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதற்குப் பாதிரியார், “அவனை ஏன் வெளியே விட்டாய், யாரிடமாவது சொன்னால் என் மானமே போய்விடும்” எனப் பதற்றத்துடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையில், உண்மை நிலை தெரியாத ஊர்க்காரர்கள் சிலர், பாதிரியார் மீது யுனோக் வீண் பழி சுமத்துவதாக நினைத்து அவரது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து யுனோக் ஊர் பெரியவர்களிடம் முறையிட்டபோது பஞ்சாயத்துப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்று நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், யுனோக் தனது நண்பர்களுடன் சென்று பாதிரியாரின் வீட்டுக் கதவைத் தட்டிப் பேச முயன்றுள்ளார்; இருப்பினும் உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறக்காததால் அவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக யுனோக் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, புகார் எழுந்ததில் இருந்தே பாதிரியார் ஷிவாகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை இந்த விவகாரத்தில் இருந்து காப்பாற்றி குற்றமற்றவர் என நிரூபிக்கப் பாதிரியார் சபை முயற்சித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட யுனோக் குற்றம் சாட்டியுள்ளார். வெளியான ஆடியோ மற்றும் செல்போன் ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
