LATEST NEWS
கிளம்பிய புது சர்ச்சை..! 3 ஆண்டுகளுக்கு முன்பே வந்த திட்டத்திற்கு இப்போது மீண்டும் அறிவிப்பா? அதிர்ச்சியில் அரசு ஆண் ஊழியர்கள்…!!
தமிழக அரசுப் பணியில் உள்ள திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, மனைவியின் பிரசவ காலத்தில் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு (தந்தை வழி விடுப்பு) வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். குழந்தை பிறக்கும் முக்கியமான தருணத்தில் தாய்க்கும் சேய்க்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இது அரசு ஆண் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் கொண்ட அனைத்து அரசு ஆண் ஊழியர்களுக்கும் 15 நாட்கள் ‘தந்தை வழி விடுப்பு’ வழங்கும் நடைமுறை 2023-ம் ஆண்டு முதலே தமிழகத்தில் அமலில் உள்ளது. மனைவியின் பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளோ இந்த விடுப்பை எடுத்துக்கொள்ளலாம் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் இதனை நிராகரிக்கக் கூடாது என்றும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும், இந்த விடுப்பு விதிகள் குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகப் பதில் பெற்று, பல அரசு ஊழியர்கள் ஏற்கனவே இந்த 15 நாள் விடுப்பைப் பயன்படுத்தியும் வருகின்றனர். இவ்வாறு 2023-ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் உள்ள ஒரு பழைய திட்டத்தை, தற்போது புதிதாக அறிமுகப்படுத்துவது போல அறிவித்திருப்பதே அரசு ஊழியர்களின் இந்த அதிர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
