LATEST NEWS
FLASH: கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவறான நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில், அத்தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ன் பொறுப்பு நீதிபதி பானுமதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்தும், வரும் டிசம்பர் 11-ம் தேதி வரை அவரைக் கடலூர் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
