பழுவேட்டரையரை பார்த்து அப்படி கேள்வி கேட்ட நெட்டிசன்கள்….. ஆவேசத்துடன் பதிலளித்த சரத்குமார்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பழுவேட்டரையரை பார்த்து அப்படி கேள்வி கேட்ட நெட்டிசன்கள்….. ஆவேசத்துடன் பதிலளித்த சரத்குமார்….!!!

Published

on

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்து வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன்,  ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Advertisement

கதைப்படி பெரிய பழுவேட்டையரின் மனைவியாக நந்தினி இருப்பார். அதேபோன்றுதான் இந்த படத்திலும் பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார். சரத்குமாருக்கு ஜோடியாக நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார்.

கதையில் எப்படி இருந்ததோ அதை படியே படத்தையும் இயக்கியுள்ளார் மணிரத்தினம். இந்நிலையில் சரத்குமார் இடம் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்த அனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதில் நான் ஒரு ஆணழகன் என்பதால்.

Advertisement

ஐஸ்வர்யா ராய் உடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று கூறினார். இதை பலரும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தாலும். அவர் உண்மையில் ஒரு ஆணழகன் என்பதால் பெரிய அளவு விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை.

இருப்பினும் அண்மையில் சரத்குமார் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இதை பார்த்த பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளில் எல்லாம் ரம்மி சரத்குமார் நடித்துள்ளார்.

Advertisement

என்று  நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வந்தனர். இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது அரசாங்கம் ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்தினால், நானும் அதில் நடிப்பதை நிறுத்துவேன். அரசாங்கம் மது அருந்துவது தவறு என்று கூறுகின்றது.

ஆனால் அதே அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. இதையெல்லாம் அவர்களிடம் கேட்பதை விட்டுவிட்டு என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இது சரியானது அல்ல என்று சரத்குமார் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in