பார்த்து பார்த்து எடுத்து என்ன பிரயோஜனம்….! செல்வராகவன் இயக்கத்தில் தோல்வியை சந்தித்த 5 படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்த்து பார்த்து எடுத்து என்ன பிரயோஜனம்….! செல்வராகவன் இயக்கத்தில் தோல்வியை சந்தித்த 5 படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களை எடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் செல்வராகவன். முதலில் தனது தந்தை இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் எழுத்தாளராக தனது திரைப்படத்தை தொடங்கியவர்.

அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் தோல்வியடைந்த படங்களை பற்றி இதில் நாம் பார்ப்போம். முதலாவது கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம்  தோல்வியைத் தழுவியது. தற்போது இந்த படத்தை மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றன.

Advertisement

இரண்டாம் உலகம், செல்வராகவும் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு, ஆர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வேறு ஒரு இணைய உலகில் நடக்கும் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் தோல்வியை சந்தித்தது. என் ஜி கே, படம் 2019 ஆம் ஆண்டு சூர்யா, சாய்பல்லவி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அரசியல் கலந்த படமாக இருந்தது. இருப்பினும் சூர்யாவின் திரை வாழ்க்கையின் இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

நெஞ்சம் மறப்பதில்லை, 2021 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா ஆகியோர்  நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. நானே வருவேன், செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் தற்போது வெளியான திரைப்படம்.’ நானே வருவேன்’ இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும். பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் காரணமாக இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in