LATEST NEWS
இவ்வளவு எளிமையா?…. இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீடு…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த போட்டியாளர்கள் பலரும் முகம் தெரியாத போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் தான் இளமையை சேர்த்த பிரபல தொகுப்பாளினி ஜனனி. மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.
அதே சமயம் 23 வயதாகும் இவர் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இலங்கையை சேர்ந்த இவர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இலங்கையில் உள்ள ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடு பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பதாக கமாண்ட் செய்து ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
