VIDEOS
இது வேற லெவல்…. வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்த கீர்த்தி சுரேஷ்….. வீடியோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்….!!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. பின்னர் தென்னிந்திய மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். சுமார் ஏழு வருடத்தின் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சாணி காகிதம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இதனிடையே சினிமாவில் இருந்து விலகி விட்டு திருமணம் செய்யப் போகிறார் என பல தகவல்களும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போனது தான். இந்நிலையில் டென்ஷனில் இருந்து வெளியேறுவதற்காக கடுமையான யோகாவை கீர்த்தி சுரேஷ் செய்துள்ள நிலையில் யோகா செய்யும் வீடியோ தற்போது இதயத்தில் வைரலாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
