செம மாஸ்…. முன்னாள் மனைவிக்கு போட்டியாக தனுஷ் செய்த காரியம்…. ரசிகர்கள் ஷாக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம மாஸ்…. முன்னாள் மனைவிக்கு போட்டியாக தனுஷ் செய்த காரியம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் தனுஷ் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் தாங்கள் பிரிய போவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு இருவரும் தங்கள் மகன்களுடன் அன்பு செலுத்தி வருகின்றனர். அதே சமயம் விவாகரத்தை அறிவித்த பிறகு டைரக்ஷனில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பலம் இறங்கியுள்ளார்.

பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி வெளியேற்றி இருந்தார். அதே சமயம் ஜிம்மில் வொர்க் அவுட் மற்றும் இயக்கம் என்று பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலும் விக்ராந்த்தும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரராக இருவரும் அதில் நடிக்க உள்ளதாகவும் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க தனுஷ் திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in